Homeசெய்திகள்சினிமாஜுனியர் என்டிஆருக்குத் தொடரும் பான் இந்தியா அந்தஸ்து

ஜுனியர் என்டிஆருக்குத் தொடரும் பான் இந்தியா அந்தஸ்து

-

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உச்சம் தொட்டவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரட்ட சிவாவுடன் தேவரா என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். ஆச்சார்யா படத்தை இயக்கியவர் இவர் ஆவார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். அத்துடன் பிரபல பாலிவுட் நடிகர் சாயிஃப் அலிகான் இதில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ராஜமௌலி, க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. 5 மொழிகளில் இந்த காணொலி வெளியான நிலையில், 24 மணிநேரம் முடிவதற்குள் 30 லட்சம்பார்வையாளர்களை இது கடந்துள்ளது. இது புதிய சாதனையை படைக்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ