Homeசெய்திகள்சினிமாLCU உருவான விதம்....லோகேஷ் இயக்கிய ஆவணப்படம்....ரிலீஸ் எப்போது?

LCU உருவான விதம்….லோகேஷ் இயக்கிய ஆவணப்படம்….ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

LCU உருவான விதம்....லோகேஷ் இயக்கிய ஆவணப்படம்....ரிலீஸ் எப்போது?ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோக்களை வைத்து மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் உலகம் முழுக்க நல்ல லாபம் பார்த்தது. அதே கான்செப்ட்டைதமிழில் டாப் ஹீரோக்களை வைத்து LCU (லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்) என்ற திரை உலகத்தை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், மாஸ்டர் ஆகிய இரு படங்களைத் தவிர கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்களை இணைத்து இந்த LCU உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்து வரும் கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் இத்தகைய புது முயற்சியை உருவாக்கிய பெருமையும் இயக்குனர் லோகேஷை தான் சேரும். LCU உருவான விதம்....லோகேஷ் இயக்கிய ஆவணப்படம்....ரிலீஸ் எப்போது?இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் எவ்வாறு தொடங்கப்பட்டது என்பதை ஒரு ஆவணப்படமாக லோகேஷ் இயக்கி உள்ளதாகவும் அதனை பிரபல நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் 3 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஆவணப்படம் ஆனது சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும். மேலும் இப்படத்தில் அனிருத் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் LCU வில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்த நரேன் இது பற்றி ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது “கைதி-2 படத்திற்கு முன்பே, LCU எவ்வாறு உருவாக்கப்பட்டது எனும் ஆவணப்படம் வெளியாகும், அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன” என்றும் தெரிவித்திருந்தார்.LCU உருவான விதம்....லோகேஷ் இயக்கிய ஆவணப்படம்....ரிலீஸ் எப்போது?Origin of LCU” எனும் பெயரில் வெளியாக உள்ள இந்த ஆவணப்படம் மிக விரைவில் நெட்ஃப்ளிக்ஸ்-ல் ரிலீசாக உள்ளது.
சினிமா ரசிகர்களின் ஆச்சரியத்தில் ஆழ்த்திய LCU எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

MUST READ