Homeசெய்திகள்சினிமாலிஸ்ட் போயிட்டே இருக்கே..... தலைவர் 170இல் இணையும் பான் இந்தியா நடிகர்கள்!

லிஸ்ட் போயிட்டே இருக்கே….. தலைவர் 170இல் இணையும் பான் இந்தியா நடிகர்கள்!

-

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170வது படம் குறித்த மற்றொரு தகவல் வெளியாக்கியுள்ளது.

ரஜினி தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படம் ரஜினியின் 169வது படமாகும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் தலைவர் 170 படத்தை தயாரிக்க உள்ளார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க போகிறது. அனிருத் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில்
தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னதாகவே தகவல்கள் கசிந்திருந்தன.

சமீபத்தில் கூட நடிகர் நானியும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பகத் பாஸில் மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் தலைவர் 170 படத்தில் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலின் மூலம் இயக்குனர் டிஜே ஞானவேல் தலைவர் 170 படத்தை மிகப்பெரிய படமாக உருவாக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

MUST READ