spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசினிமாவில் திறமை மட்டும் போதாது... நடிகை பரினிதி ஆதங்கம்...

சினிமாவில் திறமை மட்டும் போதாது… நடிகை பரினிதி ஆதங்கம்…

-

- Advertisement -
சினிமாவில் முன்னேற திறமை மட்டும் போதாது என்று பிரபல பாலிவுட் நடிகையும், ஆம் ஆத்மி எம்.பி.யின் மனைவியுமான பரினிதி சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பரினிதி சோப்ரா. இவர் நட்சத்திர பிரபலம் பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இவர் இந்தி திரையுலகில் சித்தார்த் மல்ஹோத்ரா, ரன்வீர் சிங், ஆதித்யா ராய் கபூர், சுஷாந்த் உள்பட முன்னணி இளம் நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் கடந்த 13 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளார். ஆனால், பாலிவுட் படங்கள் தவிர மற்ற மொழிப் படங்களில் அவர் அதிகம் நடித்தது இல்லை. நடிக்க ஆர்வம் காட்டியதும் இல்லை.

we-r-hiring
இவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தாவை காதலித்து வந்தார். இதையடுத்து இவர்களின் திருமண நிச்சயம் டெல்லியில் நடைபெற்றது. பின்னர் பரினிதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. பல அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பரினிதி, சினிமாவில் நான் இருப்பதை விட உயர்ந்த நிலைக்கு சென்றிருக்க வேண்டும். அந்த அளவிற்கு என்னிடம் திறமை உள்ளது. ஆனால், ஒரு சில காரணங்களால் திறமை இருந்தாலும் கூட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. சினிமாவில் நடிக்க திறமை மட்டும் போதாது. பல பிரபலங்களுடன் நட்பு வைத்துக் கொள்வதும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

MUST READ