- Advertisement -
விரைவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் பிரபல இளம் நடிகர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து நடிகர் சூரி, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகை ஸ்ரீ திவ்யா நாயகியாக நடித்திருந்தார்.


இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி அவரை வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நாயகனாக உயர்த்தியது. கலகலப்பான நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு இன்று வரை ரசிகர்கள் உள்ளனர். இத்திரைப்படம் மட்டுமன்றி, படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.



