Homeசெய்திகள்சினிமாபிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் கூட்டணியின் 'கல்கி 2898AD'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் கூட்டணியின் ‘கல்கி 2898AD’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் பிரபாஸ் சலார் படத்திற்கு பிறகு ஸ்பிரிட், ராஜாசாப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் கூட்டணியின் 'கல்கி 2898AD'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!அதே சமயம் கல்கி 2898AD திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்த படம் டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இதில் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படமானது 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ