spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவர் மிகவும் திறமையானவர்.... நடிகை வேதிகா குறித்து பிரபுதேவா பேச்சு!

அவர் மிகவும் திறமையானவர்…. நடிகை வேதிகா குறித்து பிரபுதேவா பேச்சு!

-

- Advertisement -

பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் தற்போது பேட்ட ராப் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து வேதிகா, சன்னி லியோன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.அவர் மிகவும் திறமையானவர்.... நடிகை வேதிகா குறித்து பிரபுதேவா பேச்சு! எஸ் ஜே சினு இயக்கியிருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபுதேவா, வேதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய பிரபுதேவா, “நான் 11 ஆம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டேன். அதனால் அதிகமாக படித்தவர்களை பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கும். மேலும் பாடல் ஆசிரியர்களை பார்க்கும்போது எனக்குள் பிரமிப்பு ஏற்படும். பாடல் ஆசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி பாடல்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் அதை செய்யச் சொல்லி அறிவுறுத்துவேன். அவர் மிகவும் திறமையானவர்.... நடிகை வேதிகா குறித்து பிரபுதேவா பேச்சு!அவர்கள் அதனைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு திருத்தி தருவார்கள். அதாவது நான் எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, விஜய் நடித்திருந்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற படங்கள் மிகவும் பிடித்திருந்தது. அந்த படங்களை இயக்கிய பேரரசுவை வியந்து பாராட்டியுள்ளார். என்னிடம் பலமுறை ரீமேக் செய்வது குறித்து பேசி இருக்கிறார். இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் பேரரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகை வேதிகா திறமையான நடிகை. கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்றாக தயார்படுத்திக் கொள்வார். அவர் மிகவும் திறமையானவர்.... நடிகை வேதிகா குறித்து பிரபுதேவா பேச்சு!அப்படி இல்லையென்றால் அவருக்கு இயக்குனர் பாலா படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்குமா? அவருடைய உழைப்பை கண்டு நான் மிகவும் வியந்து இருக்கிறேன். அவருக்கு என்னுடைய நன்றி. சன்னி லியோன் நடிகை என்பதை தாண்டி அனைவரையும் நேசிக்க கூடியவர். மதிக்கக் கூடியவர். அவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார் பிரபுதேவா.

MUST READ