Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே'.... விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே'.... விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அடுத்ததாக இவர் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்று இந்திய அளவில் பிரபலமானது. அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் என்ன படம் இயக்குவார்? என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டானார் பிரதீப். அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தினை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் எல்ஐசி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது இதன் தலைப்பு எல்ஐகே என்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே'.... விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ