பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே -LOVE INSURANCE KOMPANY படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் நுழைந்த இவர் லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது டிராகன், எல்ஐகே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். டிராகன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எல்ஐகே படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
The long awaited first single #Dheema is finally coming out !!
An @anirudhofficial musical ♥️
@VigneshShivN Lyrical 🫶🏽#LoveInsuranceKompany #LIK@VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav… pic.twitter.com/33lY5rzIGN
— Seven Screen Studio (@7screenstudio) October 15, 2024
அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் நடிகர்கள் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்த அடுத்த போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் தீமா எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (அக்டோபர் 16) காலை 10.06 மணி அளவில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.