spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கு சினிமாவின் டாப் நடிகரிடம் கதை சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரிடம் கதை சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரிடம் கதை சொன்னதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரிடம் கதை சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதே படத்தில் சிறிய வேடத்திலும் நடித்திருந்தார் பிரதீப். அதன் பின்னர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்திருந்தார். இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக களம் இறங்கி வருகிறார் பிரதீப். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்துள்ளது. இது தவிர எல்ஐகே, PR04 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரிடம் கதை சொன்ன பிரதீப் ரங்கநாதன்!இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரபல தெலுங்கு நடிகர் நானி, பிரதீப் ரங்கநாதன் தன்னிடம் கதை சொன்னதாக கூறியுள்ளார். அதன்படி அவர், “கோமாளி படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் எனக்கு கதை சொன்னார். அதுபோன்ற ஒரு எனர்ஜி என்னை எப்போதும் ஈர்க்கிறது. ஆனால் அந்த படம் நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் எதிர்காலத்தில் நானி – பிரதீப் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? என்று கேள்வி எழுப்பி வருவதோடு எதிர்பார்ப்புடனும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

we-r-hiring

மேலும் நடிகர் நானி, தற்போது தி பாரடைஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஹிட் 3 திரைப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ