Homeசெய்திகள்சினிமாவருடங்கள் கடந்தும் கில்லி படத்தை கொண்டாடும் ரசிகர்கள்...... பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி!

வருடங்கள் கடந்தும் கில்லி படத்தை கொண்டாடும் ரசிகர்கள்…… பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி!

-

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வருடங்கள் கடந்தும் கில்லி படத்தை கொண்டாடும் ரசிகர்கள்...... பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி!வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படம் இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசிப்பார்கள். வருடங்கள் கடந்தும் கில்லி படத்தை கொண்டாடும் ரசிகர்கள்...... பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி!அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் ரிலீஸாகி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை திரையரங்குகளில் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நாம் காண்கிறோம். இந்நிலையில் காலங்கள் கடந்தும் கில்லி படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவை கண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ஐ லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துப்பாண்டியை நேசிப்பதற்காக. உங்கள் அன்பினால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், விஜய் மற்றும் திரிஷா, கில்லி படத்தின் முழு படக்குழுவுக்கும் என் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ