Homeசெய்திகள்சினிமாபிரேமலு படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு... மார்ச் 15-ல் வெளியீடு...

பிரேமலு படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு… மார்ச் 15-ல் வெளியீடு…

-

பிரேமலு திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமலு. கிறிஸ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜூ, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதை, ஃபஹத், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். விஷ்ணு இசை பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணாக இத்திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. அதன் காரணாக தெலுங்கிலும்டப் செய்யப்பட்டு, கடந்த 8-ம தேதி வெளியானது. தெலுங்கு மொழியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமன்றி திரை நட்சத்திரங்களும், படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோர் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், பிரேமலு திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு உள்ளது. பிரேமலு படத்தின் தமிழ் வெர்சனின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பிரேமலு திரைப்படம் வரும் மார்ச் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ