Homeசெய்திகள்சினிமா'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரியங்கா மோகன்!

‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பை நிறைவு செய்த பிரியங்கா மோகன்!

-

நடிகை பிரியங்கா மோகன் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் தனது பகுதிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ‘கேப்டன் மில்லர்‘ திரைப்படம் உருவாகி வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொகேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் ஜான் கொக்கேனும் கேப்டன் மில்லர் படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டாராம். படத்திலிருந்து முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ