Homeசெய்திகள்சினிமா'கேப்டன் மில்லர்' படத்தின் பாடல் பயங்கரமா வந்திருக்கு...... பிரபல இயக்குனர் கொடுத்த அப்டேட்!

‘கேப்டன் மில்லர்’ படத்தின் பாடல் பயங்கரமா வந்திருக்கு…… பிரபல இயக்குனர் கொடுத்த அப்டேட்!

-

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொகேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீரியாடிக் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் மூன்று பாகங்களாக இப்படம் வெளியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் குறித்து மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி,”அருண் மாதேஸ்வரன் மற்றும் ஜிவி பிரகாஷ் எனது நெருங்கிய நண்பர்கள். அதனால் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பாடலை நான் கேட்டேன் கேட்டேன். ஜிவி பிரகாஷ் இதுவரை இல்லாத அளவிற்கு அருமையான பாடலை கொடுத்துள்ளார். இதற்கு மேல் அந்த பாடலைப் பற்றி கூறினால் அருண் மாதேஸ்வரன் என்மேல் கோபப்படுவார். ஆனால் அந்த பாடல் பயங்கரமாக வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

ஏற்கனவே தனுஷின் பொல்லாதவன், அசுரன், மயக்கம் என்ன, வாத்தி உள்ளிட்ட படங்களில் ஜிவி பிரகாஷ் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது இந்த கூட்டணி கேப்டன் மின்னல் திரைப்படத்திலும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

MUST READ