தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் கூட ஆண்டுதோறும ஏராளமான பாடல்கள் வௌியாகின்றன. அதிலும், கொரியன் பாடல்களுக்கு தமிழ் மக்களிடையே பெரும் ஆதரவு உண்டு. அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு கொரி பாடகர் பிஎஸ்ஒய் பாடி, நடனமாடி வெளியாகிய பாடல் தான் கங்கம் ஸ்டைல். இந்த பாடல் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
பலரும் இந்த பாடலின் அர்த்தம் தெரியாதபோதிலும், பாடலை அதிக அளவில் கேட்டு ரசித்தனர். இன்டர்நெட் பயன்பாடு குறைந்த இருந்த அன்றே, இது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதனை மையப்படுத்தி ஒரு சில படங்களில் காமெடி காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், தற்போது பாடல் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது வரை இப்பாடலை 500 கோடி பார்வையாளர்கள் கேட்டு ரசித்துள்ளனர். கொரிய வரலாற்றில் சர்வதேச அளவிலான வரவேற்பை ஏகபோகமாக பெற்ற ஒரே பாடல் இப்பாடல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கம் ஸ்டைல் பாடல், யூ டியூபில் 500 கோடி பார்வையாளர்களை கடந்து உலக சாதனை படைத்துள்ளது. 2012-ம் ஆம் ஆண்டு வெளியான இப்பாடல், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் டாப் டிரெண்டிங்கில் இருந்தது. இதுவரை, எந்தவொரு கொரியன் பாப் மியூசிக் வீடியோவும் யூடியூபில் 500 கோடி பார்வைகளை கடந்ததில்லை. அதுவும் இந்த பாடலை பாடிய பார்க் ஜே சங் இன் பிறந்தநாளில் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது.