spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்.... செய்வதறியாது திகைத்து நின்ற பெண்ணுக்கு உதவிய லாரன்ஸ்!

கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்…. செய்வதறியாது திகைத்து நின்ற பெண்ணுக்கு உதவிய லாரன்ஸ்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்.... செய்வதறியாது திகைத்து நின்ற பெண்ணுக்கு உதவிய லாரன்ஸ்! இவர் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். அதேசமயம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தில் நடிக்க உள்ளார். இது தவிர ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அமைப்பின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பூவந்தி அருகில் உள்ள சுக்கனம்பட்டியைச் சேர்ந்த குமார் – முத்துக்கருப்பி தம்பதிக்கு ரூ. ஒரு லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

கூலித்தொழிலாளர்களான குமார் – முத்துக்கருப்பி தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். தங்களுடைய மகள்களின் காதணி விழாவிற்காக முத்துக்கருப்பி கஷ்டப்பட்டு உழைத்து சிறுக சிறுக பணம் சேகரித்து வைத்துள்ளார். அதன்படி அந்த பணத்தை தகரத்திலான உண்டியலில் சேமித்து அவர் வீட்டின் உள்ளையே குழி தோண்டி புதைத்து பராமரித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ரூபாய் ஒரு லட்சம் அதில் இருப்பதை எண்ணிப் பார்த்து மீண்டும் அந்த உண்டியலை புதைத்து வைத்திருக்கிறார்.

we-r-hiring

சில நாட்களுக்கு முன்பு அந்த உண்டியலை திறக்க முயன்ற போது கரையான்கள் உண்டியலுக்குள் புகுந்து முத்துக்கருப்பி சேகரித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை அரித்துள்ளதை பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார் முத்துக்கருப்பி. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர், கரையான் அரித்த அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றி தருவதற்கான பரிந்துரைகளை செய்திருந்தனர். இந்நிலையில் ராகவா லாரன்ஸ், குமார் – முத்துக்கருப்பி தம்பதியை நேரில் அழைத்து ஒரு லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் ராகவா லாரன்ஸுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

MUST READ