Homeசெய்திகள்சினிமாநெருங்கி வரும் 'சந்திரமுகி 2' ரிலீஸ்.... ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!

நெருங்கி வரும் ‘சந்திரமுகி 2’ ரிலீஸ்…. ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!

-

நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது 17 வருடங்களுக்குப் பிறகு பி வாசு சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ரஜினியின் பெயரை கெடுத்து விடக் கூடாது என்ற பயத்தில் தான் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தான் நடித்ததாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சந்திரமுகி 2 படம் வெற்றி பெற வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

MUST READ