Homeசெய்திகள்சினிமாரஜினி பட நடிகையின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

ரஜினி பட நடிகையின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

-

பிரபல நடிகை மஞ்சு வாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். ரஜினி பட நடிகையின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாஷ்யம் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர். தற்போது மலையாளத்தில் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ரஜினி பட நடிகையின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை! அதே சமயம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியார். மேலும் இவர் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிசியாக நடித்து வரும் மஞ்சு வாரியர் திருச்சி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்துள்ளார். ரஜினி பட நடிகையின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!அப்போது அவரது காரை தேர்தல் பறக்கும் படையினர் திடீரென நேரத்தில் சோதனை செய்தனர். அப்போது அப்பகுதி மக்கள் மஞ்சுவாரியரை கண்டதும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.

MUST READ