Homeசெய்திகள்சினிமாபீரியட் திரைப்படமாக உருவாகும் ரஜினிகாந்தின் வேட்டையன்?

பீரியட் திரைப்படமாக உருவாகும் ரஜினிகாந்தின் வேட்டையன்?

-

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகம் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டுமொத்த திரையுலகிலும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வௌியாகி சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, நெல்லை, மும்பை, புதுவை என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்திற்குள்படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு செயல்படுகிறது. அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், பீரியட் திரைப்படமாக வேட்டையன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. போலி என்கவுண்டர்களுக்கு எதிராக போராடும் கதைக்களம் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது பீரியட் படம் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாதத்திற்கு முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

MUST READ