Homeசெய்திகள்சினிமா'SK21' படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

‘SK21’ படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

-

‘SK21’ படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன், தற்போது மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மேலும் சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளதாக தெரியவந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அதில், “காஷ்மீருக்கு நன்றி, இந்த 75 நாள் படப்பிடிப்புகளும் புதுமையாக இருந்தது. இடைவிடாத முயற்சியில் ஈடுபட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றி. குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன் சார் உள்ளிட்டவருக்கு நன்றி” என்று பதிவிட்டு SK 21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

MUST READ