Homeசெய்திகள்சினிமாராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்.... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்…. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்!

-

- Advertisement -

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்.... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்!

சசிகுமார் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் நந்தன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் ஃப்ரீடம், எவிடன்ஸ், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர் ஜோக்கர், ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு மதர் இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்.... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்!இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படப்பிடிப்பு தளத்தில் சசிகுமார், ராஜு முருகன், சைத்ரா ஆச்சர் ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ