பாடகி ரக்ஷிதா சுரேஷ் தான் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரக்ஷிதா தற்போது திரைப்பட பின்னணி பாடகியாக வளர்ச்சி அடைந்துள்ளார். ஏஆர் ரகுமான் இசையில் சில பாடல்களை இவர் பாடியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்திலும் ரக்ஷிதா பாடல்கள் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரக்ஷிதா தான் சமீபத்தில் விபத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

“இன்று எனக்கு பெரிய விபத்து நடந்தது. மலேசியாவில் இன்று காலை நான் ஏர்போர்ட் நோக்கி செல்லும் போது எனது கார் ரோட்டில் ஓரத்தில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த சில நொடிகளில் எனது முழு வாழ்க்கையும் ஒரு மின்னல் போல என் கண்முன்னே வந்து போனது. ஏர் பேக்குகளுக்கு நன்றி, இல்லையென்றால் நிலைமை ரொம்ப மோசமாகி இருக்கும். இன்னும் அதை நினைத்தால் உடம்பெல்லாம் நடுங்குகிறது. ஆனால், நானும் ட்ரைவரும் என்னுடன் பயணம் செய்த சக நண்பர்களும் சிறிய காயங்களுடன் தப்பித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உயிருடன் இருப்பதற்காக அதிர்ஷ்டவசமாகவும் நன்றியுடனும் உணர்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இதையடுத்து அவர் விரைவில் நலமுடன் திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை தெரிவித்து செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
