spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!

ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’…. ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர், ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 , இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

we-r-hiring

நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று பிரம்மாண்டமான வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராம்சரண் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இதில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ராம்சரண் இரட்டை இடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா போன்ற காரணங்களால் தள்ளிப் போனது. அதை தொடர்ந்து மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக படமாக்கப்பட்டு வரும் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ