Homeசெய்திகள்சினிமாராம்சரணின் அடுத்த படம் ..... பூஜையுடன் ஆரம்பம்!

ராம்சரணின் அடுத்த படம் ….. பூஜையுடன் ஆரம்பம்!

-

நடிகர் ராம்சரண் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.ராம்சரணின் அடுத்த படம் ..... பூஜையுடன் ஆரம்பம்! இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் ராம்சரண். ராம்சரணின் அடுத்த படம் ..... பூஜையுடன் ஆரம்பம்!ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் ராம்சரண், உப்பென்னா பட இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் ஏ ஆர் ரகுமான் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ராம்சரணுடன் இணைந்து சிவராஜ்குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்காலிகமாக RC16 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் ராம் சரண், ஜான்வி கபூர், புஜ்ஜி பாபு சனா, ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ