spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவார்த்தையால் பெண்களை கற்பழிக்கிறார்கள்..... அறந்தாங்கி நிஷா வேதனை!

வார்த்தையால் பெண்களை கற்பழிக்கிறார்கள்….. அறந்தாங்கி நிஷா வேதனை!

-

- Advertisement -

அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். வார்த்தையால் பெண்களை கற்பழிக்கிறார்கள்..... அறந்தாங்கி நிஷா வேதனை!ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் இந்த அறந்தாங்கி நிஷா. அதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தற்போது பல படங்களிலும் கமிட்டாகி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்தாண்டின் இறுதியில் சென்னை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சமயத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொடுத்து உதவி செய்தார். இவர் செய்த இந்த உதவியை அறந்தாங்கி நிஷா விளம்பரத்திற்காக செய்து வருகிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். வார்த்தையால் பெண்களை கற்பழிக்கிறார்கள்..... அறந்தாங்கி நிஷா வேதனை!இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அறந்தாங்கி நிஷா, “பெண்களை எளிதில் வார்த்தையால் காயப்படுத்தி விடுகிறார்கள். பெண்களை நேரடியாக கற்பழிப்பது வேறு, வார்த்தைகளால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம். இதை பெண்கள் மீது மிக இயல்பாக இருக்கிறார்கள். எதை செய்தாலும் விளம்பரத்திற்காக செய்கிறேன் என்கிறீர்கள். விளம்பரத்திற்காக செய்து நான் என்ன சிஎம் அல்லது பிஎம் ஆகப் போகிறேனா? சமுதாயத்திற்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களை ஏன் இப்படி காயப்படுத்துகிறீர்கள்” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

MUST READ