Homeசெய்திகள்சினிமாவெறித்தனமான பீஸ்டாக ரன்பீர் கபூர்... மிரட்டலான அனிமல் டிரைலர்!

வெறித்தனமான பீஸ்டாக ரன்பீர் கபூர்… மிரட்டலான அனிமல் டிரைலர்!

-

அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனரான சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் அனிமல். இதில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். பான் இந்தியா ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது படத்தின் டிரைலர் ரிலீஸாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அனில் கபூர் மற்றும் ரன்பீர் கபூர் தந்தை – மகனாக நடித்துள்ளனர். மகனுக்கு நேரத்தை கூட செலவிட முடியாத அளவுக்கு ஸ்ட்ரிக்டான தந்தையாக அனில் கபூர். பாசத்திற்காக ஏங்கும் மகனாக ரன்பீர் கபூர். நாயகி ரஷ்மிகா மந்தனாவை திருமணம் செய்து கொண்டு தன் தந்தையை பிரிந்து வாழ்கிறார் நாயகன் ரன்பீர் கபூர். அனில் கபூரை துப்பாக்கியால் யாரோ சுட்டு விட அவரது பிசினஸை கையில் எடுக்க மீண்டும் களத்தில் இறங்குகிறார் ரன்பீர் கபூர். எதிரிகளை ஈவு இரக்கமின்றி ஒரு பீஸ்ட் போல ரன்பீர் கபூர் சம்பவம் செய்வதுபோல டிரைலரில் காண்பிக்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான உடல் அமைப்புடன் பாபி தியோலுடன் மோதும் ஏர்போர்ட் சண்டை காட்சி முக்கியமான காட்சியாக இருக்கும் போல தெரிகிறது. வெறித்தனமான பீஸ்டாக ரன்பீர் கபூர்... மிரட்டலான அனிமல் டிரைலர்!படத்திற்கு ஏகமும் வன்முறை காட்சிகள் நிறைந்து ஒரு முழுமையான ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்சன் காட்சிகள் கலந்து எமோஷனல் காட்சிகளும் மிகுந்த ஒரு பக்காவான மசாலா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ