Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் மாமன்னன் பட கூட்டணி.... விரைவில் தொடங்கவுள்ள ஷூட்டிங்!

மீண்டும் இணையும் மாமன்னன் பட கூட்டணி…. விரைவில் தொடங்கவுள்ள ஷூட்டிங்!

-

- Advertisement -

மீண்டும் இணையும் மாமன்னன் பட கூட்டணி.... விரைவில் தொடங்கவுள்ள ஷூட்டிங்!உதயநிதி ஸ்டாலின்,கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் ஆகியோரின் கூட்டணியில் மாமன்னன் திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கி இருந்த இப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாமன்னன் திரைப்படம். அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள், ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசியிருந்தது இந்த படம். சமூகத்தில் சொல்லத் தயங்கும் விஷயங்களை இதன் மூலம் சொல்லி இருந்தார் மாரி செல்வராஜ். வடிவேலுவிற்கு சிறந்த கம்பேக் படமாக இந்த படம் அமைந்திருந்தது. இதுவரை காமெடியனாக மட்டுமே பார்த்த வடிவேலுவை வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தார் மாரி செல்வராஜ். நடிப்பு அரக்கன் பகத் பாசில் வில்லனாக மிரட்டி இருந்தார்.மீண்டும் இணையும் மாமன்னன் பட கூட்டணி.... விரைவில் தொடங்கவுள்ள ஷூட்டிங்!

இந்நிலையில் நடிகர் பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்களின் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு 2024 ஜனவரி மாதத்தில் திருவண்ணாமலை பகுதியில் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ