சினிமா

மீண்டும் இணையும் ‘ரங்கஸ்தலம்’ கூட்டணி….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

Published by
Yoga
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராம்சரண் நடிப்பில் ரங்கஸ்தலம் திரைப்படம் வெளியானது.மீண்டும் இணையும் 'ரங்கஸ்தலம்' கூட்டணி..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். சுகுமார் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை கடந்து சுகுமார் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் ஹிட் அடிக்க அதைத்தொடர்ந்து புஷ்பா தி ரூல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் ராம்சரண், ஆர் ஆர் ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கேம் சேஞ்சர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக தனது 16வது படத்தை புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் நடிக்க உள்ளார் ராம்சரண். இந்நிலையில் அடுத்தபடியாக ராம்சரண், மீண்டும் ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி ராம் சரணின் 17 வது படமாக உருவாக உள்ள RC16 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதற்கு கமிட்டாகி உள்ளார். இந்தப்படத்திலும் சமந்தா தான் கதாநாயகியாக நடிகை இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு வருகின்ற மார்ச் 27ஆம் தேதி ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
Published by
Yoga
Tags: Cinema ramcharan Rangasthalam Sukumar சினிமா ரங்கஸ்தலம் ராம்சரண்.சுகுமார்