Homeசெய்திகள்சினிமாவருண் லாவண்யா தம்பதி வெளியிட்ட வீடியோ... இணையத்தில் வைரல்..

வருண் லாவண்யா தம்பதி வெளியிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்..

-

டோலிவுட்டில் புதிய நட்சத்திர தம்பதிகளாக புது வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் வருண் தேஜ் மற்றும் லாவண்யா தம்பதி இந்தாண்டு கடந்து வந்த பாதையை வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற படத்தில் நடித்தார். தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இத்தாலியில் டசுக்கனி நகரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் இருவரின் திருமணமும் நடைபெற்றது. கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராம் சரண், பவண் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இருவரின் வரவேற்பு நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், வருண் தேஜ் மற்றும் லாவண்யா தம்பதி இந்தாண்டு கடந்து வந்த பாதையை வீடியோவாக பகிர்ந்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ