spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் இரு மெகா படங்களில் இணைந்த பிரபல நடிகை 

தெலுங்கில் இரு மெகா படங்களில் இணைந்த பிரபல நடிகை 

-

- Advertisement -
டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தமிழில் தளபதியாக விஜய் கொண்டாடப்படுவதை போல, தெலுங்கில் மகேஷ் பாபுவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமான மகேஷ்பாபு, ராஜகுமாருடு திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவரது நடிப்பில் புகாரி, ஒக்கடு, அத்தடு ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வௌியாகி மாபெரும் ஹிட் அடித்தன.
 இறுதியாக மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம் திரைப்படம் வெளியானது. இதில் மீனாட்சி சௌத்ரி மற்றும் ஸ்ரீ லீலா நாயகிகளாக நடித்திருந்தனர். இத்திரைப்டபத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இதனிடையே, ஜெர்மனியில் உள்ள பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று சண்டைக் காட்சிகளுக்காக மகேஷ்பாபு தயாராகி வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக இணைவதாக கூறப்படுகிறது. அதே சமயம், அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்திலும் அவர் நாயகியாக நடிப்பதாக தெரிகிறது. நடிகை ருக்மணி வசந்த் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 23-வது படத்திலும், விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ