Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்டமாக உருவாகும் சலார் திரைப்பட சண்டைக் காட்சி

பிரம்மாண்டமாக உருவாகும் சலார் திரைப்பட சண்டைக் காட்சி

-

பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், சலார் திரைப்படத்தின் சண்டைக் காட்சியில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக ஜீப்புகள், லாரிகள் என 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

MUST READ