சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
நடிகர் சமுத்திரக்கனி, ஒரு பக்கம் படம் இயக்கினாலும் இன்னொரு பக்கம் பல படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2, ஆர் யூ ஓகே பேபி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமுத்திரகனி திரு. மாணிக்கம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சமுத்திரக்கனியுடன் இணைந்து இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனன்யா, நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்குகிறார். ஜி பி ஆர் கே சினிமாஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இதற்கு இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு மேகமலை, மூணார், குமுளி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ‘எளிய மனிதர்களின் வாழ்வே அறம்’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.