Homeசெய்திகள்சினிமாசாண்டி நடித்துள்ள ரோசி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

சாண்டி நடித்துள்ள ரோசி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

-

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி என்றழைக்கப்படும் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய வேடத்தில் சாண்டி நடித்திருந்தார். அவர் இப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதை தொடர்ந்து படம் வெளியான பிறகு சாண்டிக்கு இத்திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. பலரும் சாண்டியின் நடிப்பை கண்டு மிரண்டு போயினர்.

லியோ படத்திற்கு முன்பாகவே மலையாள பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் அவர் கிஃப்ட் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில், அவர் கன்னடத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ், சாண்டியின் அடுத்த திரைப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரோசி எனும் தலைப்பிடப்பட்ட இப்படத்தில் சாண்டி நடித்து வருகிறார். ஷூன்யா இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் சாண்டியை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ