spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடேங்கப்பா... ஒட்டுமொத்த பரம்பரையுடன் சேர்ந்து சங்கராத்தி கொண்டாடிய சிரஞ்சீவி...

அடேங்கப்பா… ஒட்டுமொத்த பரம்பரையுடன் சேர்ந்து சங்கராத்தி கொண்டாடிய சிரஞ்சீவி…

-

- Advertisement -
தெலுங்கில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. அவரது மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்று மாபெரும் சாதனையை படைத்தது. சிரஞ்சீவியின் மகன் மட்டுமன்றி அவரது தம் பி மற்றும் தங்கையின் மகன்கள் மற்றும் உறவினர்களும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.

அதுமட்டுமன்றி, சிரஞ்சீவியின் உறவினர் அல்லு அர்ஜூன், வருண் தேஜ் அவரது மனைவி லாவண்யா என அனைவருமே நடிகர்களாக உள்ளனர். வருண் மற்றும் லாவண்யா இருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணம், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அனைத்து பண்டிகைகளுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்
அந்த வகையில் இன்று தமிழகத்தில் பொங்கல் என கொண்டாடும் நேரத்தில் தெலுங்கு தேசத்தில் மகா சங்கராத்தியாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று சிரஞ்சீவி குடும்பத்தினர் அனைவரும் அவர்களின் பூர்வீக வீட்டில் ஒன்று கூடி வழிபட்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ