Homeசெய்திகள்சினிமாசரத்குமார், அமிதாஷ் கூட்டணியின் பரம்பொருள்...... ரிலீஸ் குறித்த அப்டேட்!

சரத்குமார், அமிதாஷ் கூட்டணியின் பரம்பொருள்…… ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

சரத்குமார் சமீப காலமாக பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் அவர் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதன்படி இவர் சமீபத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த போர் தொழில் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியானது இன்று வரையிலும் இப் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் சரத்குமார் பரம்பொருள் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து அமிதாஷ் நடித்துள்ளார். இந்த படத்தை அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க எஸ் பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் மற்றும் கிரிஸ் படத்தை தயாரித்துள்ளனர்.

கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படத்தினை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ