spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டீசர் வெளியானது!

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டீசர் வெளியானது!

-

- Advertisement -

நடிகர் சரத்குமார் நடித்துள்ள புதிய படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

நடிகர் சரத்குமார் சமீபகாலமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் அசோக்செல்வனுடன் இணைந்து நடித்த போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது. மேலும் விதார்த் உடனினைந்து சமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

we-r-hiring

இந்நிலையில் சரத்குமாரின் 69 ஆவது பிறந்தநாள் இன்று இவர் நடித்துள்ள ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சரத்குமார் உடன் இணைந்த அமிதாஷ் நடித்துள்ளார். அரவிந்த் ராஜ் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு எஸ் பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ