நடிகர் சரத்குமாருக்கு, ராதிகா சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சரத்குமார் திரைப்படத்துறையின் ஆரம்ப காலகட்டத்தில் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர். அதன் பின் 1992 ஆம் ஆண்டு வெளியான சூரியன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர். அதைத்தொடர்ந்து இவர் சூரிய வம்சம், நாட்டாமை, புலன் விசாரணை, பாட்டாளி, சமுத்திரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து திரை உலகில் தன் பெயரை நிலைநாட்டினார். 80 காலகட்டங்களில் இவர் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி புரட்சித் திலகம், சுப்ரீம் ஸ்டார் என்று பலராலும் அழைக்கப்படுபவர்.
இதற்கிடையில் சரத்குமார் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தென்காசி தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
1980 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் மிகப்பெரிய ஹீரோவாக திகழ்ந்த சரத்குமார் திரைத்துறையில் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்ஜிஆர் வருது, சிவாஜி கணேசன் விருது உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அண்ணாச்சி, சூரியவம்சம் படங்களுக்கு பிறகு
கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு ஐயா, பச்சை கிளி முத்துச்சரம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்த ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவான சரத்குமார் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் இவர் நடித்திருந்த போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்னும் சில படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் 69 வது பிறந்த நாளை கொண்டாடும் சரத்குமாருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் நடிகை ராதிகா சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Happiest birthday to the Lion Heart of our lives @realsarathkumar may your zeal and perseverance for life grow from strength to strength 💪🏻💪🏻more strength, peace and happiness to you from the bottom of my heart❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/x3y5h4a4Qk
— Radikaa Sarathkumar (@realradikaa) July 14, 2023
அதில், “சிங்கத்தைப் போன்ற உறுதியான இதயம் கொண்டவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் விடாமுயற்சியும், வைராக்கியமும் மேன்மேலும் வலிமையாகட்டும். அமைதியும் சந்தோஷமும் என்றும் உங்கள் வாழ்வில் இருக்க நான் மனமார வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் மற்றும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவகிறது.மேலும் இவர்களின் காதலுக்கு என்றும் வயதில்லை என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.