Homeசெய்திகள்சினிமாசசிகுமார் நடிக்கும் நந்தன்... சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்...

சசிகுமார் நடிக்கும் நந்தன்… சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்…

-

சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் நந்தன் திரைப்படத்திலிருந்து சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இன்று நடிகராக கலக்கி வருபவர் சசிகுமார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதைத்தொடர்ந்து 2010ல் ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று தந்தது. அதன் பிறகு நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சுந்தர பாண்டியன், நாடோடிகள் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இறுதியாக சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயோத்தி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், படத்தில் சசிகுமாரின் நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டது. இப்படத்திற்காக பல விருதுகளும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து நா நா, எவிடென்ஸ் உள்பட பல படங்களில் சசிகுமார் நடித்திருக்கிறார். மேலும், சூரி நாயகனாக நடிக்கும் கருடன் படத்திலும் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நந்தன். மார்ச் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், பிசிஆர். சட்டத்தை மையப்படுத்தி சில அரசியல் கட்சிகளுக்கு எதிரான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதால், புதிய சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, படத்தில் இருந்த நெருடலான வசனங்களை படக்குழுவே நீக்கி இருக்கிறது.

MUST READ