Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்..... வெளியான புதிய தகவல்!

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்….. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்..... வெளியான புதிய தகவல்!சீமான் ஒரு அரசியல்வாதியாக வலம் வருபவர். அதே சமயம் சில வருடங்களுக்கு முன்னால் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர். அந்த வகையில் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மேலும் மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

அதன் பிறகு கடந்த சில வருடங்களாக அரசியலில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் சீமான், விக்னேஷ் சிவன் இயக்கும் LIC- Love Insurance Corporation படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதன்படி இப்படத்தில் சீமானுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்..... வெளியான புதிய தகவல்!

அதாவது விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐசி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் சீமான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது.பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்..... வெளியான புதிய தகவல்! அதைத் தொடர்ந்து தற்போது கிடைத்த தகவலின் படி சீமான் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தில் சீமான் இயற்கை விவசாயத்தை நேசிப்பவராக நடிக்கிறார் என்றும் பிரதீப் ரங்கநாதன் இதில் செயற்கை விவசாயத்தை நேசிப்பவராக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  இயற்கை விவசாயத்தை நேசிக்கும் அப்பாவிற்கும் செயற்கை விவசாயத்தை நேசிக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை பேசும் கதை தான் எல்ஐசி என்று கூறப்படுகிறது.

MUST READ