Homeசெய்திகள்சினிமாதமிழ்ல பாத்துட்டு நல்லா பண்ணிருக்கோமான்னு சொல்லுங்க லோகேஷ்... அன்புடன் வேண்டுகோள் விடுத்த ஷாருக் கான்!

தமிழ்ல பாத்துட்டு நல்லா பண்ணிருக்கோமான்னு சொல்லுங்க லோகேஷ்… அன்புடன் வேண்டுகோள் விடுத்த ஷாருக் கான்!

-

இந்நிலையில் ‘ஜவான்’ படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து லோகேஷ் கனகராஜ் பதிவு வெளியிட்டிருந்தார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியா மணி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இன்று இந்தப் படம் உலகளவில் வெளியாகிறது. எனவே பலரும் அட்லீ, ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

“ஷாருக் கான் சார், என்னுடைய பாசத்திற்குரிய சகோதரர்களான அட்லி, அனிருத் விஜய் சேதுபதி அண்ணா நயன்தாரா மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும்  என்னுடைய வாழ்த்துக்கள். ஜவான் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஷாருக் கான் “மிக்க நன்றி லோகேஷ். தயவு செய்து படத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள். மேலும் தமிழில் பார்த்துவிட்டு நாங்கள் சரியாக செய்திருக்கிறோமா என்றும் சொல்லுங்கள். உங்களுடைய லியோ படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ