‘சக்திமான்’ என்னும் தொடர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2005 வரை டிடி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிரபலமான தொடராகும்.
இத்தொலைக்காட்சி தொடரில் முகேஷ் கண்ணா தயாரித்து, அவரே சக்திமானாக நடித்திருந்தார். இத்தொடரின் சூப்பர்
ஹீரோவான சக்திமான் இன்றைய வரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
எனவே தற்போது இத்தொடர் திரைப்படமாக தயாராக உள்ளது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரூபாய் 200 முதல் 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த படத்தில் முகேஷ் கண்ணா ஹீரோவாக நடிக்கவில்லை என்றும் இந்தியாவின் பிரபல சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.