spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு விரைவில் டும் டும் டும்..... அவரே சொன்ன பதில்!

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு விரைவில் டும் டும் டும்….. அவரே சொன்ன பதில்!

-

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அந்த வகையில் இவர் பல பாடல்களை பாடி இருக்கிறார். குக் வித் கோமாளி சிவாங்கிக்கு விரைவில் டும் டும் டும்..... அவரே சொன்ன பதில்! அதைத் தொடர்ந்து சிவாங்கி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைவரின் பிளாக்பஸ்டராக திகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து கொண்டார். அதேசமயம் கடைசியாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசனில் கோமாளியாக இல்லாமல் குக்காக களமிறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதற்கிடையில் இவர் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. குக் வித் கோமாளி சிவாங்கிக்கு விரைவில் டும் டும் டும்..... அவரே சொன்ன பதில்!இந்நிலையில் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சோசியல் மீடியாவை பிறந்தாலே யாருக்காவது திருமணம், நிச்சயதார்த்தம், கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற செய்திதான் பரவி வருகிறது. நானும் இப்போது அந்த கட்டத்தில் தான் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். சிவாங்கி இந்த பதிவை கண்ட ரசிகர்கள் சிவாங்கிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆகவே சிவாங்கி தனது திருமணம் குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ