spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅன்று சிம்பாவுக்கு குரல்... இன்று ஏலியனுக்கு குரல்... அசத்தும் சித்தார்த்..

அன்று சிம்பாவுக்கு குரல்… இன்று ஏலியனுக்கு குரல்… அசத்தும் சித்தார்த்..

-

- Advertisement -

அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார்.

இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் திரைப்படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகிபாபு, இஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு ஆனாலும், படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. கிராபிக்ஸ் பணிகள் காரணாக படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக விளக்கம் அளித்த படக்குழு, வரும் பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அயலான் படத்திலிருந்து முதல் பாடல் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் என படக்குழு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அயலான் படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
we-r-hiring

இந்நிலையில், படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில், படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்த நடிகர் குறித்த தகவல் வௌியாகி இருக்கிறது. பிரபல நடிகர் சித்தார்த் தான் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளார். அயலான் படத்தின் ஒரு பகுதியாக இந்த சித்தார்த்துக்கு நன்றி தெரிவித்து படக்குழு பதிவிட்டுள்ளது. மேலும், தி லயன் கிங் படத்தில் சிம்பா சிங்கத்திற்கு குரல் கொடுத்தது சித்தார்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ