Homeசெய்திகள்சினிமாசில்க் ஸ்மிதா வாழ்க்கையின் மர்மங்களை அவிழ்க்க வரும் 'சில்க் ஸ்மிதா- தி அன்டோல்ட் ஸ்டோரி'!

சில்க் ஸ்மிதா வாழ்க்கையின் மர்மங்களை அவிழ்க்க வரும் ‘சில்க் ஸ்மிதா- தி அன்டோல்ட் ஸ்டோரி’!

-

சில்க் ஸ்மிதா வாழ்க்கையின் மர்மங்களை அவிழ்க்க வரும்...'சில்க் ஸ்மிதா- தி அன்டோல்ட் ஸ்டோரி'!1980 கால கட்டங்களில் வசீகரமான கனவு கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. ஒரு படத்தில் சில்க் ஸ்மிதா நடிக்கிறார் என்றாலே அவருக்காக திரையரங்கிற்கு படையெடுத்த ரசிகர்களின் காலகட்டம் அது. பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாகவே நடித்து வந்தார் சில்க் ஸ்மிதா. ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் மற்றும் துணை கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தவர். ஒரு பெரிய நடிகருக்கு எந்த அளவுக்கு வரவேற்புகள் இருக்குமோ அந்த அளவுக்கு சில்க் ஸ்மிதாவின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது தியேட்டர்கள் ஆரவாரமாக இருக்கும். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்,மோகன்லால் உட்பட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர்.சில்க் ஸ்மிதா வாழ்க்கையின் மர்மங்களை அவிழ்க்க வரும் 'சில்க் ஸ்மிதா- தி அன்டோல்ட் ஸ்டோரி'! இத்தகைய பெருமைமிகு சில்க் ஸ்மிதா 23 செப்டம்பர், 1996 சென்னையில் மர்மமான முறையில் இறந்து போனார். இவருடைய மரணம் தற்கொலை என்றே சொல்லப்பட்டு வந்தது. சில்க் ஸ்மிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் அவர் இறந்த இடத்தில் கிடைத்தது. தன் உழைப்பை அனைவரும் சுரண்டியதாகவும், தனக்கு நிம்மதி இல்லை என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய தற்கொலைக்கான காரணம் இதுதான் என்று தெளிவாக கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே இது கொலைதான் என்ற செய்திகளும் பரவி வந்தன.

சமீபத்தில் சில்க் ஸ்மிதாவிற்கு சமர்ப்பணம் செய்வது போன்ற ஒரு காட்சி  வெளியான மார்க் ஆண்டனி படத்தில் கூட நாம் பார்த்திருக்கிறோம். இத்தகைய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக உருவாவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2011 இல் ஹிந்தியில் வெளியான “தி டர்டி பிக்சர்” ( The Dirty Picture) என்ற படமும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமே. இப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். இப்படம் பல மொழிகளிலும் ரிலீசானது. இருப்பினும் இப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் நடைபெற்ற பல ரகசிய தகவல்கள் கூறப்படாமல் இருந்துள்ளன. எனவே தற்போது உருவாக உள்ள சில்க் ஸ்மிதாவின் வரலாற்றுப் படத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த சொல்லப்படாத பல விஷயங்களை சொல்லப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.சில்க் ஸ்மிதா வாழ்க்கையின் மர்மங்களை அவிழ்க்க வரும் 'சில்க் ஸ்மிதா- தி அன்டோல்ட் ஸ்டோரி'!சில்க் ஸ்மிதா- தி அன்டோல்ட் ஸ்டோரி” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக சந்திரிகா ரவி நடிக்க உள்ளார். சில்க் ஸ்மிதா பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான போஸ்டரில் அச்சு அசல் சில்க் ஸ்மிதா போலவே காட்சியளிக்கிறார் சந்திரிகா ரவி. இயக்குனர் ஜெயராம் இப்படத்தை இயக்க உள்ளார். எஸ் பி விஜய் படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. 2024 ஆம் ஆண்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ