spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜயை பாராட்டிய சிம்ரன்..... என்ன சொன்னார் தெரியுமா?

விஜயை பாராட்டிய சிம்ரன்….. என்ன சொன்னார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகை சிம்ரன், விஜயை பாராட்டியுள்ளார்.விஜயை பாராட்டிய சிம்ரன்..... என்ன சொன்னார் தெரியுமா?

ஒரு காலத்தில் நடிகை சிம்ரன் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இன்று வரையிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். விஜயை பாராட்டிய சிம்ரன்..... என்ன சொன்னார் தெரியுமா?இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் நடந்த பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “விஜய் ஒரு நல்ல நடிகர். நல்ல டான்ஸர். சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடிப்பார். அவர் ஒரு ஆல்-ரவுண்டர். நிச்சயம் அவர் அரசியலிலும் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நடிகை சிம்ரன் விஜயுடன் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜயை பாராட்டிய சிம்ரன்..... என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார் விஜய். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் விஜய்க்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ