spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்... ரிலிஸ் தேதி அப்டேட் இதோ...

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்… ரிலிஸ் தேதி அப்டேட் இதோ…

-

- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

குட்டி சுட்டி முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்ப நாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் தொடங்கிய இவரது பயணம், இன்று வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினிமுருகன், காக்கி சட்டை, டாக்டர் என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாகக வெளியான திரைப்படம் அயலான். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார். நீண்ட நாட்களாக வௌியாகாமல் இருந்த இத்திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப பெற்றது.

we-r-hiring
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டு அண்மையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்ககு இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியானபோது, பெரும் போராட்டமும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஜூலை மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ