Homeசெய்திகள்சினிமாஅடே அப்பா... சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்...

அடே அப்பா… சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…

-

- Advertisement -

கோலிவுட்டின் முன்னனி நடிகராக உலா வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். ஒரு சில காரணங்களால் இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது ஒரு முடிவுக்கு வந்த நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அயலான் திரைப்படமானது ஏலியனை மையப்படுத்தி அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றனர். மேலும், அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை தாஜ் சொகுசு விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தில், சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றுள்ளனர், மேலும், சிவாவின் குழந்தைகள் ஆராதனா மற்றும் மகன் குகன் இருவரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில், அயலான் திரைப்படத்தில் சம்பளமே வாங்காமல் சிவகார்த்திகேயன் நடித்து கொடுத்ததாக நேர்காணல் ஒன்றில் கூறி இருக்கிறார். படம் வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்த நிலையில், சம்பள பணத்தை வாங்க வில்லை எனவும், படம் வெளியாவது தான் முக்கியம் என சிவகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார். இந்த பேட்டி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

MUST READ