Homeசெய்திகள்சினிமாஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்..... என்ன காரணம்?

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்….. என்ன காரணம்?

-

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது.ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்..... என்ன காரணம்? அதைத் தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போகும் அந்த நடிகர் யார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதன்படி கவின், துருவ் விக்ரம், அதர்வா போன்ற நடிகர்கள் அந்த லிஸ்டில் இருந்தனர். ஆனால் தற்போது ஜேசன் சஞ்சய், சிவகார்த்திகேயனை சந்தித்து தன்னுடைய கதையை சொன்னதாகவும், சிவகார்த்திகேயன் இந்த கதை தனக்கு செட்டாகாது என விலகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் விஜய், தளபதி 69 படத்திற்குப் பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதால் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்..... என்ன காரணம்? இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்தால் அது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தும் எனவும் விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைக்கும் என்ற காரணத்தினாலும் சிவகார்த்திகேயன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க மறுத்திருக்கலாம் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் யார் நடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ