spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதி கோட் படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்

தி கோட் படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்

-

- Advertisement -
ஒட்டுமொத்த இந்திய திரைஉலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு அனைத்து திரையுலகிலும் ரசிகர்கள் ஏராளம். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் கோட். அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நாயர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் மற்றும் சென்னை என மாறி மாறி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தி கோட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தும் நடிப்பதாக கூறப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையின்போது படம் வெளியாகிறது.

MUST READ