சிவகார்த்திகேயன், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் 70வது பிறந்த நாள் இன்று. இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். அதே சமயம் இவர் நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தது அன்பறிவ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். இதற்கிடையில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பலரும் அமரன் திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
Wishing the commanding officer of #Amaran, @ikamalhaasan sir, a great birthday.
Thank you for this great movie sir. ❤️🙏 pic.twitter.com/JESOcgbaKO— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 7, 2024

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த அருமையான படத்திற்காக (அமரன்) நன்றி” என்று குறிப்பிட்டு கமல்ஹாசன் உடன் அமரன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.